சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் -முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு இச்சேவையைப் பெறலாம்.;

Update: 2022-01-06 07:07 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.1.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு இச்சேவையைப் பெறலாம்.

Tags:    

Similar News