சென்னையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சென்னை அண்ணாசாலையில், Happy Streets கொண்டாட்டத்தினை முன்னிட்டு, 20.08.2023 மற்றும் 27.08.2023 ஆகிய 2 தினங்களில் காலை 03.00 மணி முதல் காலை 09.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.ரோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் Happy Streets கொண்டாட்டம் 20.08.2023 மற்றும் 27.08.2023 ஆகிய தினங்களில் காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை நடைபெறுவதை முன்னிட்டு காலை 03.00 மணி முதல் காலை 09.30 மணி வரை சென்னை வார சிறப்பு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நகர சாலைகளில் (சைக்கிள் ஓட்டுதல் & மோட்டார் சைக்கிள்கள்) ஓட்டுவதன் மூலம் நகரத்தின் உணர்வை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
இதில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி (பென்சர் பிளாசா சிக்னலில் இருந்து காலை 05.30 மணி வரை சுமார் 60 சைக்கிள்களும் மற்றும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலை 09.00 மணி முதல் அண்ணாசாலையில் சுமார் 60 மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்கும் நிகழ்விற்கு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அண்ணாசாலையில் திரு.வி.கா.சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் இடது புறமாக திருப்பப்பட்டு பின்னிசாலை -எத்திராஜ் சாலை - எத்திராஜ் சாலை X மார்ஷல் சாலை சந்திப்பு -மார்ஷல் சாலை- பாந்தியன் ரவுண்டானா ஆதித்தனார் சாலை சித்ராபாயிண்ட் பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அண்ணா சாலையில் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பின்னிசாலை X E.B.Link ரோடு சந்திப்பில் வலது புறமாக திருப்பப்பட்டு E.B.Link ரோடு டேம்ஸ் சாலை பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அண்ணா சாலையில் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை X ஜி.பி.ரோடு சந்திப்பில் இடதுபுறமாக திருப்பப்பட்டு ஜி.பி.ரோடு - வுட்ஸ் ரோடு மணிக்கூண்டு சந்திப்பு -ஒயிட்ஸ் சாலைவழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
பின்னிசாலையில் இருந்துவரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். இடது புறமாக திரும்பி செல்ல அனுமதி இல்லை.
ஜி.பி.சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை X ஜி.பி.ரோடு சந்திப்பில் வலது புறமாக திரும்பி அண்ணாசாலை அண்ணாசிலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். இடதுபுறமாக திரும்பி செல்ல அனுமதி இல்லை.
வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.