சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை ஐஐடியில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-21 11:04 GMT

ஐஐடி சென்னை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 31 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

மற்ற மாநிலங்களில் கொரோனா கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு மட்டுமே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றாலும், பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், கல்வி நிறுவனங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை ஐஐடியின் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 18 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

Similar News