மனவளர்ச்சி இல்லாத காவியாவின் அம்மாவிற்கு உதவிக்கரம் நீட்டவும்
பாப்பா பெயர் காவியா. வயது 9 ஊர் குன்றத்தூர் அருகில் பெரியார் நகர் மனவளர்ச்சி கிடையாது. பிறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கிறாள்.;
இந்த பாப்பா பெயர் காவியா. வயது 9 ஊர் குன்றத்தூர் அருகில் பெரியார் நகர் மனவளர்ச்சி கிடையாது. பிறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கிறாள்.
காவியாவின் அப்பா ஒரு மெகா குடிகாரர். அவரால் வீட்டுக்கு எந்த உதவியும் கிடையாது. காவியாவிற்கு 11 வயது உள்ள அக்கா இருக்கிறாள்.
காவியாவின் அம்மா எக்ஸ்போர்ட்ல் வேலை செய்து கொண்டு இருந்தார். இப்போது எக்ஸ்போர்ட் வேலையும் இல்லை. வாடகை வீடு. வறுமை தாண்டவம் ஆடுகிறது.
காவியா முரட்டுத்தனம் நிறைந்த குழந்தை. அவள் பாட்டி பார்த்துக் கொண்டு இருந்தார். அதனால் அம்மா வேலைக்கு செல்ல முடிந்தது. ஆனால் இப்போது அவளை கட்டுபடுத்துவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
கொஞ்சம் கண் அயர்ந்தாலும் மெயின் ரோட்டிற்கு சென்று விடுகிறாள். கோபம் வந்தால் துணியைச் சின்ன சின்னதாக கிழித்து விடுகிறாள். இப்படி இருப்பதால் அவளை யாரிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவள் அம்மா.
அதனால் ஒரு உதவி கேட்டிருக்கிறார். அவர்கள் குடும்பத்திற்கு கொஞ்சம் மளிகை பொருட்கள் காவியாவிற்கு டிரஸ். (பழைய டிரஸ் கூட போதுமானது)
இதை பார்க்கும் படிக்கும் யாராவது அந்த குழந்தைக்கும் அவரின் அம்மாவிற்கும் உதவிக்கரம் நீட்டவும்.
✍️தொடர்புக்கு ( சென்னை புரசைவாக்கம் உதவும் கைகள்) புரசை வெங்கடேசன்
9840914739