அறிவு,படைப்புத்திறன் கொண்டது சென்னை- பிரதமர் மோடி

Update: 2021-02-14 07:20 GMT

சென்னை மாநகர் முழுக்க முழுக்க அறிவுத்திறன் மற்றும் படைப்புத்திறன் கொண்டது என பிரதமர் மோடி பேசினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு டாங்கிகள், மெட்ரோ ரயில்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, சென்னையில் இன்றைய தினம் இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இன்று எனக்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி. சென்னை மாநகர் முழுக்க முழுக்க அறிவுத்திறன் மற்றும் படைப்புத்திறன் கொண்டது என்றார்.

மேலும் இன்று துவங்கியுள்ள திட்டம் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். கல்லணை கால்வாய் திட்டம் நிறைவு பெற்ற பிறகு கிடைக்கும் பலன் நாம் நினைத்து கூட பார்க்க முடியாதது.சுமார் 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் கல்லணை கால்வாய் திட்டம் சாலச்சிறந்தது.சாதனை படைக்கும் அளவிற்கு தமிழக விவசாயிகள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர் என்று தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.

Tags:    

Similar News