சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்விரோதம் காரணமாக பட்ட பகலில் ரவுடி நாராயணன் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில், ரவுடி நாராயணனை 4 பேர் கொண்ட கும்பல் பட்ட பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலக்ஷ்மி, உதவி ஆணையர் தினகரன் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் புதுவண்ணாரப்பேட்டை பல்லம் பகுதியை சேர்ந்த ஏல்லப்பன் (24), சூர்யா (22), எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரவணன்(22), தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சரவணன் (22) ஆகியோர் ரவுடி நாராயணனை கொலை செய்தது தெரிய வந்ததை அடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.