மாமூல் கேட்டு அரிவாள் வெட்டு- ஒருவர் கைது

Update: 2021-01-28 09:03 GMT

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கஞ்சாபோதையில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேட்டில் மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு ஏராளமான வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டிற்கு போதையில் வந்த ஒருவர் அங்கிருந்த வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் கையில் அரிவாளுடன் வந்த அந்த நபர் 4 பேரை மாமூல் கேட்டு வெட்டியதால், அங்கிருந்த வியாபாரிகளே அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் என்றும், அவர்மேல் ஏற்கெனவே வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News