சென்னை திருவொற்றியூரில் மது போதையில் இருந்த பெயிண்டர் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் காந்தி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குமாரன். கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வருகிறார். இவர் மது போதைக்கு அடிமையாகி பணிகளுக்கு சரிவர செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். காலை முதலே மதுபோதையில் இருந்து வந்த இவர் மாலை அதிக அளவில் மது அருந்தி விட்டு மாடியில் இருந்துள்ளார்.
எதிர்பாராதவிதமாக எழுந்து நிற்கும் போது இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.