வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்-திருமாவளவன்

Update: 2021-01-25 09:31 GMT

வேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராஜன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தவேளாண் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும்லைவர் திருமாவளவன் கூறும் போது, இந்திய பன்மைத்துவத்தை ஜனநாயக சக்திகள் காப்பாற்ற வேண்டும்.மூன்று வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு கொண்டுள்ளது. மத்திய அரசு ஈவு இரக்கம் இல்லாமல் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் என பிடிவாதமாக உள்ளது.

நாளை நடைபெற உள்ள டிராக்டர் பேரணியை சீர்குலைக்க நினைத்தால் உலக அரங்கில் வெட்கி தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்படும். விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற நேர்ந்தால் மத்திய அரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே இன்று மாலையே 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று நாளை போராட்டம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 இடங்களில் தலைநகரம் அமைப்பது என கூறியிருப்பது ஏற்புடையது. அதை விசிக வரவேற்கிறது என்றார்.

Tags:    

Similar News