சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

Update: 2021-01-24 06:55 GMT

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சென்னையின் முக்கிய இடமான சென்னை விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விமான நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் விமான நிலைய போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

பயணிகளையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதி, சரக்கு பாா்சல்கள் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சந்தேகப்படும்படி யாராவது சுற்றி திரிந்து கொண்டு இருந்தால் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி பிறகு அனுப்பப்படுகின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News