தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. நேற்று வரை வரை 42,947 பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது .இந்நிலையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இவர் தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் 908 ஆவது நபர். சில தினங்களுக்கு முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் என்பது குறிபிடத்தக்கது.