தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Update: 2021-01-20 06:14 GMT

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.26 கோடியாக உள்ளது. அதில் 3.08 கோடி ஆண் வாக்காளர்களும், 3.18 கோடி பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,246 வாக்காளர்களும் உள்ளனர்.18 முதல் 19 வயதை சேர்ந்தவர்களில் 4.80 லட்சம் நபர்கள் ஆண்களாகவும், 4.16 லட்சம் நபர்கள் பெண்களாகவும் உள்ளனர். முதன் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக 8,97,694 நபர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி துறைமுகம் உள்ளது. அங்கு 1,76,272 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News