சென்னையிலிருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவள்ளூரை சோ்ந்த பயணி கைது செய்யப்பட்டார்.
சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானம் இன்று காலை புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது திருவள்ளூரை சோ்ந்த அப்துல் ரசாக்(32) என்பவா் சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்திருந்தாா். அவரை சோதனையிட்டபோது, உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த யூரோ வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா்.அதன் மதிப்பு ரூ.7 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து பயணியின் பயணத்தை ரத்து செய்து, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.