கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.
தமிழகத்திற்கு கோவிஷீல்டு மருந்துகள் இன்று வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தன. தமிழகத்திற்கு 5,36,500 கோவிட் ஷீல்ட், 20,000 கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மருந்துக் கிடங்கு உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்கட்டமாக தடுப்பு மருந்துகள் வைக்கப்படவுள்ளன.
பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் வினய் விமான நிலையத்தில் இருந்து தடுப்பு மருந்துகளை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளார். டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்து 10 கிடங்குகளுக்கு அந்த தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இன்று மாலை பிரித்து வழங்கப்பட உள்ளது.