அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலைமையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது போல் அரியலூர், பெரம்பலூர், திருச்சி , கரூர், மயிலாடுதுறையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானமானது மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.