திருவொற்றியூரில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் சமத்துவ மக்கள் கழகத்தின் மகளிர் அணியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கும்மி அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாநில மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் தலைமையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களில் 100 ரூபாய் வரை சமையல் சிலிண்டர் விலையை ஏற்றி வீட்டில் சமைக்க முடியாத நிலைக்கு மத்திய அரசு தங்களை தள்ளி உள்ளதாகவும் நிறுத்தப்பட்ட மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும், பெட்ரோல் டீசல் மூலம் அத்தியாவசிய தேவைகளின் பொருட்கள் விலையேற்றத்தால் எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் அவதிப்படுவதாக உடனடியாக உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கும்மியடித்து பாடல்களைப் பாடி மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கும்மியடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது