மழைநீரால் வாழ்வாதாரம் இழந்த மக்கள்: வார்டு உறுப்பினர் உதவிக்கரம்

கல்பாக்கம் அருகே, மழைநீரால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு, வார்டு உறுப்பினர் அரிசி மூட்டைகளை வழங்கினார்.

Update: 2021-11-13 10:15 GMT

பெரியார் நகர் பகுதி மக்களுக்கு ,அப்பகுதி வார்டு உறுப்பினர் தென்றல் கோபி ஏற்பாட்டில்,  அரிசி மூட்டைகளை, புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி தனபால் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில்,  கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. புதுப்பட்டினம் பெரியார் நகர் தாழ்வான பகுதி என்பதால், மழைநீர் சுமார் 200கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்து,  சேதத்தை ஏற்படுத்தியது.

மழைநீரால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அப்பகுதி மக்களுக்கு,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளரும், புதுப்பட்டினம் 11வது வார்டு உறுப்பினருமான தென்றல் கோபி ஏற்பாட்டில்,  5 கிலோ அளவு கொண்ட 200க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.  இதில்,  புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி தனபால் மற்றும் கவுன்சிலர் தனபால் ஆகியோர் உடனிருந்து பொதுமக்களுக்கு அரிசி மூட்டையை வழங்கினர்.

Tags:    

Similar News