மாமல்லபுரம் அருகே நடந்த கோர விபத்தில் 3பேர் பலி

மாமல்லபுரம் அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-09 15:15 GMT

பாண்டிச்சேரியை சேர்ந்த மூவர் தனது உறவினர்கள் ஆகியோருடன் ஒரே காரில் நாளை சென்னையில் நடைபெறவிருக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று மாலை புறப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை, சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மற்றொரு கார் திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கியது.

காரில் இருந்த ஓட்டுநர் உள்பட மூன்றுபேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காரில் பயணம் செய்த 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 2 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உறவினர்கள் இல்ல நிகழ்ச்சிக்கு வந்த போது விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News