திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கழுக்குன்றம் அருகே பி.எஸ்.என்.எல் தற்காலிக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேப்பமரத்தில் கயிற்றில் தூக்கில் தொங்குவதாக இன்று காலை திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது தகவலின் பேரில் விரைந்து சென்ற திருக்கழுக்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,
போலீசார் விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபிநாத் வயது 50 என்பது தெரியவந்தது. இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருவதாகவும், மேலும் இவருக்கு அல்லி ராணி என்ற மனைவியும், மணிகண்டன் என்ற மகனும், திவ்யா, பிரீத்தா என்ற 2 மகள் உள்ளனர்,
தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் தனது சொந்த செலவுக்கு காசு இல்லாததாலும், இவருடைய மனைவியும், மகன், மகள்கள் கண்டுகொள்ள வில்லை என்கிற விருத்தியிலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது,