முறைக்கேட்டில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்

செங்கல்பட்டு அருகே முறைக்கேட்டில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம் செய்து செங்கல்பட்டு கலெக்டர் ஆர்.ராகுல்நாத் உத்தரவு.;

Update: 2021-07-20 04:45 GMT

மாதிரி படம் 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சீயாலங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து வரப்பெற்ற புகார் மீது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) காஞ்சிபுரம் நேரடி விசாரணை நடத்தினார். அதில், இம்மையத்தில் உலர் உணவுப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி வழங்கப்படாத நிலை உள்ள காரணத்தால், சீயாலங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சத்துணவு அமைப்பாளர் சந்திரவேலன் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் ஆர்.ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News