செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கருமாரப்பாக்கம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2021-04-30 01:00 GMT

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கருமாரப்பாக்கம்-ஈச்சங்கரணை ஆகிய கிராமங்களுக்கு நடுவே தனியார் செல்போன் அமைக்க முயன்றபோது அதனை சுற்றியுள்ள 8 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் ஜே,சி,பி இயந்திரங்களுடன் வந்த முன்னாள் காவல் அதிகாரி ஒருவரின் தலைமையில் அதே இடத்தில் டவர் அமைக்க பணியை துவங்கினர்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் வாக்கிவாத்தில் ஈடுபட்டு திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் தகவல் அளித்தனர். அங்கு வந்த தாசில்தார் துரைராஜ், மற்றும் ஈச்சங்கரணை வி.ஏ.ஓ ஹரிகிருஷ்ணன், மற்றும் கருமாரப்பாக்கம் வி.ஏ.ஓ சுமதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்தினர். எனவே, செல்போன் டவரை மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News