மாமல்லபுரத்தில் நாட்டிய விழா: அறநிலையத்துறை முதன்மை செயலர் ஆய்வு
மாமல்லபுரத்தில் நாட்டிய விழா முன்னேற்பாடுகள் குறித்து, அறநிலையத்துறை அரசு முதன்மை செயலர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழா, மாமல்லபுரத்தில் வெகு விமரிசியாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்திய நாட்டிய விழா 2021- 2022 ம் ஆண்டுக்கான நாட்டிய விழா நடைபெறுவதையொட்டி, அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச்செயலர் சந்திரமோகன், இன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலைகள் மற்றும் சுற்றுலா தலங்களை, கள ஆய்வு மேற்கொண்டார். உடன் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் ராகுல் ஆகியோர் உடனிருந்தனர்.