உணவு வினியோகிப்பது போல் நடித்து கஞ்சா சப்ளை: கில்லாடி ஆசாமி கைது
சென்னை அருகே, ஒஎம்ஆர் சாலையில் உணவு டெலிவரி செய்வது போல், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே, ஆன்லைன் ஆர்டர் உணவ்வை டெலிவரி செய்வது போல் நடித்து, இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், கானத்தூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.. அப்போது ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது போல், டி ஷர்ட் அணிந்தபடி, டூ வீலரில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரை, தாழம்பூர் காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான பிரகாஷ்குமார் சேனாபதி என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து சீரழித்து வந்த நபரை கைது செய்த ஆய்வாளர் வேலு உள்ளிட்ட காவல் குழுவினரை, தாம்பரம் கமிஷ்னர் ரவி வெகுவாக பாராட்டினார்.