போலி அரசு திட்ட அறிவிப்புகளை வெளியிட்ட யூடியூபர் கைது
அரசு திட்டங்கள் என கூறி போலி அறிவிப்புகளை வெளியிட்ட புதிய அறிவிப்புகள் யூடியூபர் கைது. அதிக வருமானத்திற்காக பதிவிட்டதாக வாக்குமூலம்.
சென்னை கிழக்கு தாம்பரம், பாரதமாதா தெருவை சேர்ந்தவர் கார்த்தி(37), இவர் தாம்பரம் மாநகராட்சி 48வார்டில் மாமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் அவரது மொபைலில் யூடியூப் பார்த்த போது ரேசன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய், உள்ளிட்ட 4 அறிவிப்புகள் என வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் முன்னணி தொலைக்காட்சிகளின் படங்களும் வைக்கப்பட்டிருதது.
இதனை கண்ட திமுக மாமன்ற உறுப்பினர் நேராக நியாய விலைக்கடைக்கு சென்று இந்த அறிவிப்பு குறித்து கேட்ட, அதற்கு கடைக்காரர் இது போன்ற அறிவிப்புகள் ஏதும் வரவில்லை என கூறியுள்ளனர்.
எனவே இந்த அறிவிப்பு வெளியிட்டவரைப குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேன்கனிக்கோட்டை, நாகிரெட்டிபாளையத்தை சேர்ந்த புதிய அறிவிப்புகள் யூடியூப் சேனல் உரிமையாளர் ஜனார்த்தன்(22), என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தியை பார்த்து, பதிவிட்டு யூட்டியூபில் பதிவிட்டதாக கூறினார். அப்போது தான் அதிக பார்வையாளர்களும், அதிக வருமானமும் வரும் என்றார்.
அவரை சேலையூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.