வண்டலூர் பைபாஸ் சாலையில் மொபட் மீது காா் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, காா் டிரைவா் கைது
வண்டலூர் பைபாஸ் சாலையில் மொபட், காா் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக போலீசார் காா் டிரைவரை கைது செய்தனர்.;
வண்டலூர் பைபாஸ் சாலையில் மொபட் கார் மோதிய விபத்தில் பலியான பெண்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே முடிச்சூா் வரதராஜபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் மரியா ஜெனிபர் (57).இவா் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வண்டலூா் பைபாஸ் சாலையில் வண்டலூரில் இருந்து கரசங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது தூண்டில் கழனி என்ற இடம் அருகே சாலையில் திரும்புவதற்கு முயற்சித்துள்ளார். அதே நேரத்தில் படப்பையில் இருந்து வண்டலூர் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட மரியா ஜெனிபா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா
மணிமங்கலம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சொகுசு காா் டிரைவா் கூடுவாஞ்சேரியை சோ்ந்த நிதின் (36) என்பவரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.