செவிலியர்களை கைத்தட்டி உற்சாகமாக வரவேற்ற தாம்பரம் தீயணைப்பு பயிற்சி வீரர்கள்
தாம்பரம் சானடோரியம் தீயணைப்பு பயிற்சி மையத்தில் செவிலியர்களை கைத்தட்டி உற்சாகமாக வரவேற்ற பயிற்சி வீரர்கள்;
தாம்பரம் சானடோரியம் பகுதியிலுள்ள தீயணைப்பு பயிற்சி மையத்தில் உள்ள தீயணைப்பு காவலர்களுக்கு பயிற்சி நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது விழிப்புணர்வு முகாம் இன்று காலை நடைபெற்றது. முகாமிற்கு பயிற்சி மையத்தின் இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பீர்க்கன்காரணை மருத்துவ அலுவலர் ராகவி தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி சம்பந்தமான எழுந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருத்துவர்களின் சேவை பாராட்டும் விதமாக பரங்கிமலை வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி உள்ளிட்ட மருத்துவ குழுவினருக்கு தாம்பரம் தீயணைப்பு பயிற்சி மைய வீரர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். மேலும் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.