தாம்பரம் அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு தமுமுகவினர் உணவு வழங்கல்!
தாம்பரம் அரசு மருத்துவமனையில் 300 பேருக்கு தமுமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.;
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சானிடோரியம் அரசு நெஞ்சக மருத்துவமனையில் கொரோனா மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மதிய உணவாக இன்று பிரியாணி வழங்கப்பட்டது.
இதனை பம்மல் நகர 12வது வார்டு தலைவர் அக்பர் ஏற்பாட்டில் தமுமுக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் நைனார் முஹம்மது 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். இதில் தமுமுகவை சேர்ந்த ஏராளமானோர் உடன் இருந்தனர்.