லஞ்சம் வாங்கிய திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது

லஞ்சம் வாங்கிய தாம்பரம் திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-27 14:15 GMT

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. மற்றும் உதவியாளர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 9 மாதங்களாக பணிபுரிந்து வருபவர் கிராம நிர்வாக அலுவலர் தீபா. அதே பகுதியை சேர்ந்த பியூலா என்பவர் அவரது இடத்திற்கு பட்டா மாறுதலுக்காக தீபாவை நாடிய போது 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஒருவழியாக பேரம் பேசி 13 ஆயிரம் ரூபாய் இறுதி செய்யப்பட்டது.

லஞ்சம் கொடுக்க பியூலா விரும்பாததால் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீசார் இன்று 13 ஆயிரம் ரூபாயை இரசாயனம் தடவி வி.ஏ.ஓ. தீபாவிடம் கொடுக்க வைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மற்றும் உதவியாளர் தனலட்சுமியும் கைது செய்யபட்டனர்.

விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News