திருநீர்மலையில் கள்ளசாரயத்தை தடுக்க டிரோன் கேமரா முலம் கண்காணிப்பு!
திருநீர்மலையில் கள்ளசாரயம் மற்றும் ஊறல்கள் டிரோன் கேமரா முலமாக கண்காணிப்பு பணியை மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.;
பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் ட்ரோன் மூலம் கள்ளச்சாராய கண்காணிப்பு பணி மேற்கொண்ட காட்சி.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, கல்குவாரி, புலிகொரடு உள்ளிட்ட பகுதிகளில் பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் காவால்துறை ஐஜி மற்றும் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் ராஜலஷ்மி தலைமையில் ட்ரோன் கேமரா உதவியுடன் திருநீர்மலை பகுதிகளில் கள்ளசாராயம் காய்ச்சும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தாம்பரம் புலிகொரடு மற்றும் அதனை சுற்றியுள்ள கடப்பேரி பகுதிகளிலும் மலை, கல்குவாரி பகுதிகளில் ட்ரோன் கேமரா முலம் கள்ளச்சாராயத்திற்கான ஊறல்கள் இருக்கின்றனவா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் அதிக காவல்துறையினர், மலை காடுகாள் நிறைந்த பகுதிகளில் களம் இறங்கி தீவிர சோதனையில் ஈடுபடபோவதாக ஆய்வாளர் ராஜலஷ்மி தெரிவித்தார். இதில் அமலாக்க பிரிவு தலைமை காவலர்கள் உடன் இருந்தனர்.