மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த 13 வயது சிறுமி உயிரிழப்பு

Togito Cool Drinks-பெசன்ட் நகர் மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-04 10:39 GMT

Togito Cool Drinks

Togito Cool Drinks-சென்னை பெசன்ட் நகர், ஓடை மாநகரில் வசித்து வருபவர் சதீஷ் - காயத்ரி தம்பதி. இவர்களது இளைய மகள் தரணி(13), இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் (Togito cola) மற்றும் ரஸ்னா வாங்கி குடித்துள்ளார்.

கூல்டிரிங்ஸ் குடித்த சில மணித்துளிகளில் சிறுமி வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார். மூக்கில் இருந்து சிவப்பு நிறத்தில் சளி வந்துள்ளது. பயந்து போன சிறுமியின் அக்கா உடனடியாக தனது அம்மாவை அழைத்து வந்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறியுள்ளது. உடனடியாக சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூட்டிரிங்ஸ் சிறிதளவை ஆய்வுக்கு உட்படுத்த போலீசார் கையகப்படுத்தியுள்ளனர்.

மளிகை கடையில் தரமற்ற பொருட்கள் விற்கபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பெசன்ட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News