கலெக்டர் உத்தரவை வட்டாட்சியர் நிறைவேற்றவில்லை என மூதாட்டி புகார்

Chengalpattu Collector -செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவை வட்டாட்சியர் நிறைவேற்றவில்லை என மூதாட்டி புகார் கூறி வருகிறார்.

Update: 2022-09-07 03:45 GMT

பாதிக்கப்பட்ட நாகரத்தினம்மாள்.

Chengalpattu Collector -செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த  கிழக்கு தாம்பரம், மணிமேகலை தெருவில் வசித்துவருபவர் நாகரத்தினம்மாள்(வயது68), இவரது கணவர் லட்சுமணன் இறந்து விட்டார். முதுமை காலத்தில் மகன் கவனித்துக்கொள்வான் எனக் கருதி, தன்னுடைய பெயரில் இருந்த சொத்தான 2555 சதுரஅடி மனையில் கட்டபட்ட வீட்டோடு மூன்று வருடம் முன் தனது மகனான முரளிக்கு தாய் நாகரத்தினம்மாள் எழுதி வைத்தார்.

ஆனால் சொத்து கை மாறியதும் மகன் தனது மனைவியுடன் சேர்ந்து கொண்டு கொடுமைப்படுத்தியதாக மூதாட்டி நாகரத்தினம்மாள் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தனது சொத்துகளை எனது மகன் முரளிக்கு எழுதிவைத்ததாகவும் சொத்து அவர் பெயருக்கு மாறியவுடன் மருமகளோடு சேர்ந்து கொண்டு  வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் தற்போது இருக்க இடம்மின்றி தவிப்பதாகவும்மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான சட்டம் 2007ன் படி புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியருக்கு புகாரின் மீது தக்க விசாரணை செய்ய உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக தன்னை ஏமாற்றி எழுதிவாங்கிய வீட்டை மீட்டெடுக்க ஓயாது முயற்சியாக மூன்று வருடங்களுக்கு பின்னர் அவருக்கு மீண்டும் அந்த சொத்தானது நாகரத்தினம்ம்மாள் பேரில் ஒரு பைசா செலவின்றி அரசே மாற்றம் செய்து தற்போது இந்த சொத்து முழுஉரிமை தாய் பெயருக்கு மாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

முதியவர்களை தங்கள் பிள்ளைகள் பராமரிக்கவில்லை என்றால் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான சட்டம் 2007ன் படி புகார் கொடுத்தால் அவர்களுக்காக இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின் கீழ் அவர்களின் சொத்தை மீண்டும் கோரமுடியும்.

தாம்பரம் ஆர். டி. ஓ.  அறிவுடைநம்பி செய்த விசாரணையில் மகன் முரளி தாயை தாக்கியது மற்றும் சரிவர உணவு அளிக்காதது, கவனிக்காதது அவர் மேற்கொண்ட விசாரணையில்  தெரியவந்தது.

மாவட்ட ஆட்சியர் அறிவுரைபடி தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி விசாரணை செய்து மீண்டும் மகனிடம் இருந்து அந்த வீட்டை மீட்டு உடனடியாக தாய் நாகரத்தினம்மாளிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த மூன்று மாதத்திற்கு முன் பிறப்பித்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தொடர்ந்து மெத்தன போக்கில் ஈடுபட்டுவரும் தாம்பரம் வட்டாட்சியர் தன்னை இன்று, நாளை என வர சொல்லி அலை கழித்து வருவதாக  மூதாட்டி புகார் கூறி வருகிறார்.

கடந்த மாதம் 23-08-22ம் தேதி பிறப்பித்த உத்தரவின் படி 26-08-22ம் தேதி காலை 10 மணிக்குள் மகன் தன் வீட்டை காலி செய்து தாய் நாகரத்தினம்மாளிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை எனில் அன்று பிற்பகல் 2 மணியலவில் வீட்டின் பூட்டை உடைத்து மனுதாரரிடம் ஒப்படைக்கபடும் என வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒன்றினை கடந்த மாதம் வீட்டின் வாயிலில் ஒட்டி சென்றனர்.

அன்று முதல் இன்றுவரை நோட்டீஸ் ஒட்டி சென்ற வருவாய்துறையினர் வரவே இல்லை என்று கூறும் மனுதாரர் நாகரத்தினம்மாள் நான் தினந்தோறும் வி. ஏ. ஓ. அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாம்பரம் தாசில்தார் அலுவலகம் என காலை முதல் மாலைவரை அங்கு காத்துக்கிடகின்றேன் என வருத்தத்துடன் கூறும் மூதாட்டி கலெக்டர், ஆர் டி ஒ உத்தரவு அளித்தும் தாசில்தார் முறையாக சொத்தினை எனக்கு மீட்டு தராமல் தொடர்ந்து மூன்று மாதகாலமாக மெத்தனம் காட்டி வருவது அதிகாரிகளால் நான் மிகுந்த வேதனையில் உள்ளதாக கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News