மத்திய அமைச்சரை வரவேற்று சாலையின் நடுவே ஆபத்தான நிலையில் பேனர்
மத்திய அமைச்சரை வரவேற்று சாலையின் நடுவே ஆபத்தான நிலையில் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.;
சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் புதிய ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளிகள் கட்டடம் திறக்கப்பட்டு ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவாலால் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய அமைச்சரை வரவேற்க தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையின் நடுவே முறையான அனுமதியின்றி ஆபத்தான முறையில் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில பேனர்கள் தொங்கிக் கொண்டு மோசமான நிலையில் இருந்தது.
இதனை கண்டு கொள்ளாமல் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2019ம் ஆண்டு செம்டம்பர் 12ம் தேதி இதே போன்ற சாலையின் நடுவே அமைக்கப்பட்ட வரவேற்பு பேனரால் தான் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். அப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இனி பேனர் வைக்கமாட்டோம் என உறுதியளித்திருந்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் அதனை காற்றில் பறக்க விடும் விதமாக மேயர் கலந்து கொண்ட நிகழ்விலேயே பேனர் வைத்திருந்தது சமூக ஆர்வலர்கள் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக முனுமுனுத்தனர்.