ஜோதிநகரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

தாம்பரம் அருகே, மாடம்பாக்கம் ஜோதிநகரில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2021-12-09 01:30 GMT

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஜோதிநகரில்,  ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா, ஞானவாசிஷ்ட சிகரம் அருள்மாமணி ரமணி குருஜி தலைமையில் நடந்தது. அதன்பின்னர் மூலவர் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில்,  ஆன்மீக பத்கர்கள், கிராம மக்கள் என நூற்றுகணக்கானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இன்று ( 9ம் தேதி)  முதல்,  48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில்,  திருக்கோவில் தலைவர் கோவிந்தன், துணை தலைவர் தேவேந்திரன், கண்ணன், செயலாளர் மணி, பொருளாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News