தாம்பரம்: 2 மருந்தகங்களில் தொடர் கொள்ளை: உயிர்காக்கும் மருந்துகளை தேடினார்களா?

தாம்பரம் அருகே தொடர்ச்சியாக 2 மருந்தகங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மருந்துகளையும் தேடியுள்ளதால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-06-05 11:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் காமராஜபுரத்தில் பாபு என்பவா் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறாா். இவா் நேற்று இரவு வழக்கம்போல் மெடிக்கல் ஷாப்பை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாா். இன்று காலை வந்து பார்த்த போது கடை பூட்டு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைக்கபட்டிதருந்த ரூ.65,000 ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.அதோடு மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் கலைக்கப்பட்டு சிதறி கிடந்தன. இதனால் திருடா்கள் எதோ குறிப்பிட்ட மருந்தை தேடியுள்ளனா் என்று தெரியவந்துள்ளது.

அதே போல் அருகில் உள்ள ராமநாதன் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல் ஷாப் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அவா் வந்து பாா்த்தபோது, கல்லாவில் வைக்கபட்டிருந்த ரூ.20,000 ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்த மெடிக்கல் ஷாப்பிலும் அதைப்போல் மாத்திரை, மருந்துகள் சிதறிக்கிடந்தன.

இது குறித்து சேலையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், தடையங்களை சேகரித்தனர். போலீசார் சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு மர்ம  நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்காளை தேடி வருகின்றனர்.

இந்த திருடா்கள் குறிப்பாக மெடிக்கல் ஷாப்களை மட்டுமே குறிவைத்து திருடியுள்ளனா். அதோடு கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை மட்டும் எடுக்காமல், மருந்து, மாத்திரைகளையும் கலைத்துப்போட்டு எதோ மருந்து, மாத்திரைகளை தேடியுள்ளதுபோல் தெரிகிறது. எனவே கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தும் உயிா்காக்கும் உயா் ரகம் போன்ற மருந்துகளை தேடிவந்துள்ள மா்ம ஆசாமிகளா?  அல்லது தீவிரவாதி யாருக்காவது காயம் ஏற்பட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரிரைகளை தேடியுள்ளனரா? என்று போலீசாா்  பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News