தாம்பரம் ரயில் நிலையம் அருகே இன்று தீ விபத்து- பரபரப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள பழைய கழிவு பொருட்கள் கிடங்கில் இன்று காலை தீவிபத்து விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

Update: 2021-06-18 04:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள மின்சார ரயில்களுக்கான பணிமனை அருகே, ரயில்வே பழைய பொருட்கள் கிடங்கு  உள்ளது. அப்பகுதியில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. திபுதிபுவென்று நெருப்பு பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியது.

இதனால், அப்பகுதியே பெரும் புகைமண்டலமாக காட்சியளித்தது. ரயில்வே பணிமனையில் பணியாற்றும் ஊழியா்கள் பெரும்பரப்பரப்பு அடைந்தனா். தீ பணிமனைக்கு பரவினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சூழலில், .உடனடியாக ரயில்வே தீயணைப்பு வண்டி மற்றும் தாம்பரம் தீயணைப்பு வண்டி ஆகியன, சம்பவ இடத்திற்கு வந்து சுமாா் 45 நிமிடங்களில் தீயை முழுவதுமாக அணைத்தன.

இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் பற்றி தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாா் விசாரணை நடத்துகின்றனா். இச்சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News