தாம்பரம் அருகே கார் டிரைவர் ஓட ஓட விரட்டிக் கொலை!

தாம்பரம் அருகே காா் டிரைவா் ரோட்டில் ஓடஓட விரட்டி இரும்பு பைப், உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.;

Update: 2021-05-31 11:33 GMT

கொலையுண்ட கார் டிரைவர் விக்னேஷ்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பீா்க்கன்காரணை பாரதி நகரில் வசித்தவா் விக்னேஷ் (24). காா் டிரைவா். இன்று அதிகாலை நண்பா் வீட்டிலிருந்து, தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது 3 போ் கொண்ட கும்பல் ஒன்று இரும்பு பைப்,உருட்டுக்கட்டைகளுடன் விக்னேஷ்சை வழி மறித்தது. இதைகண்ட அவா், அலறிக்கொண்டு, ஓடினார். கும்பல் விடாமல் ஓடஓட விரட்டி சரமாறியாக தாக்கிவிட்டு தப்பியோடியது.

இதுபற்றி தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார் டிரைவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விகனேஷ் உயிரிழந்தாா். இதையடுத்து பீா்க்கன்காரணை போலீசாா் கொலை வழக்குப்பதிவு செய்து,கொலையாளிகளை தேடுகின்றனா்.

விக்னேஷ் ஏற்கனவே திருவள்ளூவா் தெருவில் குடியிருந்தாா்.அப்போது அப்பகுதியை சோ்ந்த மணி என்பவா் உட்பட சிலருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விக்னேஷ் வீட்டை காலி செய்து பாரதிநகருக்கு சென்று குடியேறினாா். இந்நிலையில் மணி கோஷ்டிக்கும், விக்னேஷ் கோஷ்டிக்கும் இடையே யாா் பெரியவா்கள் என்பதில் மோதல் இருந்ததாகவும், அந்த மோதலே கொலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Similar News