தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு

தாம்பரம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ. 65 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.;

Update: 2022-03-12 13:15 GMT

தாம்பரம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு காணப்பட்டது

தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் மூலம்  ஒரே நாளில் 164 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 65 லட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு  தீர்வு அளிக்கப்பட்டது.

சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாாஜிஸ்திரேட் சகானா மற்றும் அனுபிரியா, உரிமையியல் நீதிபதி நளினி தேவி ஆகியோரும் தனிதனியாக வழக்குகளை விசாரணையை மேற்கொண்டனர். இதில் 524 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.இதில் 164 வழக்குகள் விசாரணையில் முடிவு காணப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இவற்றில் 64 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செட்டில்மெண்ட் பணம் பெற்று கொடுக்கப்பட்டதாக தாம்பரம் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தெரிவித்தார்.

Tags:    

Similar News