தாம்பரம் தற்காலிக போலீஸ் கமிஷனர் அலுவலகம் : தமிழக டி.ஜி.பி ஆய்வு
தாம்பரத்தில் தற்காலிகமாக செயல்படவுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்தார்
சென்னை மாநகர காவல் அணையளர் காவல் எல்லைகளை பிரித்து மேலும் கூடுதலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லைகளையும் விரிவு படுத்தி தாம்பரத்தை தலைமையிடமாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் செயல்பட அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது,
இதற்காக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளராக ரவி ஐ.பி.எஸ் நிமியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவர் மூலம் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையை ஒட்டி அரசு நெஞ்சக நோய் மருத்த்வமனைக்கு ஒதுக்கப்பட்ட 9.5 கிரவுண் இடத்தில் தாம்பரம் மாநகர காவல் ஆணையளர், தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது,
ஆனாலும் அதுவரை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட அலுவலகம் தேடிவந்த நிலையில் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் மாருதி நகரில் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை தற்காலிகமாக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகமாக செயல்பட தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் மு.ரவி, தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்,
அதனையடுத்து விரைவில் இந்த கட்டிடத்தில் தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகம் செயல்படதுவங்கும் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.