காஞ்சிபுரம் அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை: மாமனார் கைது

மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் மாமனார் கைது. மற்றவர்கள் தலைமறைவு.;

Update: 2022-03-28 20:45 GMT

நடராஜன்.

மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் மாமனார் கைது. மற்றவர்கள் தலைமறைவு.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை,  அண்ணா நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர், (ஜெயஸ்ரீ (27). இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம், நாவலுாரைச் சேர்ந்த, சதீஷ்(31), என்வருக்கும், கடந்தாண்டு, ஜூன் 4ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, பெண் வீட்டார், 40 சவரன் நகைகள் உட்பட, 18.50 லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசை வழங்கி உள்ளனர்.

திருமணம் முடிந்த, சில நாட்களிலேயே வரதட்சணை கேட்டு, ஜெயஸ்ரீயை மாமனார் நடராஜன், மாமியார் சாந்தகுமாரி மற்றும் சதீஷின் சகோதரர் ராஜேஷ் ஆகியோர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். மாமியார் சாந்தகுமாரி சூடும் வைத்துள்ளார். அக் 6ம் தேதி, ஜெயஸ்ரீயிடம், நடராஜனும், 8ம் தேதி ராஜேஷூம் தவறாக நடந்துள்ளனர். பாலியல் தொல்லை மற்றும் வரதட்சணை கொடுமை அதிகரித்ததால், கணவர் வீட்டில் இருந்து தப்பிய, ஜெய்ஸ்ரீ தன், தாய் வீட்டிற்கு வந்தார்.

ஆனால், சதீஷ் வீட்டார் தொடர்ந்து, வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தி வந்ததால், தாம்பரம், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில், புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெய்ஸ்ரீயின் மாமனாரான நடராஜனை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள, ஜெய்ஸ்ரீயின் கணவர் சதீஷ், அவரது அண்ணன் ராஜேஷ், மாமியார் சாந்தகுமாரியை தேடி வருகின்றனர். எனினும், மகளிர் காவல் நிலைய போலீசார், நடராஜனின் குடும்பத்தாரை தப்பி வைப்பதற்காகவே, கைது நடவடிக்கையை தவிர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags:    

Similar News