மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக வேலை பார்க்கக் கூடாது: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
திமுக மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு பின்னால் நிற்க வேண்டுமே தவிர எதிராக வேலை பார்க்கக் கூடாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.;
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வார்டுகளில் 50வது வார்டில் திமுக சார்பில் மனித நேய மக்கள் கட்சி துணைதுணை செயலாளர் யாக்குப் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து நேற்று இரவு திமுக சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், விடுதலை சிறுத்தை கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு ஆகியோர் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் பேசிய அமைச்சர் அன்பரசன், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில் ஒரே ஒரு வார்டு திமுக கூட்டனி கட்சியான மனித நேய மக்கள் கட்சிக்காக ஒதுக்கபட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சிக்கு தான் பொதுமக்கள் வாக்களித்து பெரும் வாரிய வித்யாசித்தில் வெற்றி பெற செய்வார்கள். திமுக கட்டுபாட்டுள்ள இயக்கம்; ஆதலால் இயக்கத்தின் மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு பின்னாmf நிற்க வேண்டுமே தவிர கட்சிக்கு எதிராக வேலை செய்ய கூடாது.
இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் காழ்புண்ர்ச்சியின்றி அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் கூட்டணி கட்சியை எதிர்த்து போட்டியிட்டவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என பேசினார்.