சேலையூர் உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

சேலையூர் உணவகத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-15 08:30 GMT

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், கேம்ப் ரோட்டில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான குவாலிட்டி ரெஸ்டாரண்ட் உணவகத்தில் நேற்று உணவு உட்கொண்ட நபர் கெட்டுப்போன இறைச்சி, சிக்கன் ரைசில் அரிசி சரியில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி உணவுப்பாதுகாப்பு அலுவலர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் அதிகாரிகள் இன்று குவாலிட்டி ரெஸ்டாரண்ட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் கெட்டுபோன இறைச்சி 10 கிலோ கைப்பற்றப்பட்டது. இதில் தடைசெய்யப்பட்ட கலரை சேர்த்து பீரீசரில் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சமைக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருந்தது, நூடுல்ஸ், ரைஸ் எல்லாம் பழைய நிலையில் இருந்துள்ளது, 4 பாக்ஸ் கலர் பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்து மொத்தமாக குப்பையில் கொட்டி அழித்தனர். பிளாஸ்டிக் கவரில் சிக்கனை வைக்க கூடாது எனவும் எச்சரித்தனர்.

மேலும் உணவக ஊழியர்களுக்கு உணவுப் பொருட்களை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கினர்.
பின்னர் 7 நாட்களுக்குள் உணவகத்தை சுத்தம் செய்து, ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று குறிப்பிட்டு சுகாதாரமான முறையில் உணவகத்தை வைத்திருக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குறைகளை நிவர்த்தி செய்து விட்டு உணவு பாதுகாப்பு அலுவலருக்கு எழுத்து மூலம் தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News