கல்லூரி நண்பர்கள் குடும்பத்துடன் சபாபதி படம் பார்க்க ஏற்பாடு செய்த சந்தானம்
கல்லூரி நண்பர்கள் குடும்பத்துடன் சபாபதி படம் பார்க்க நடிகர் சந்தானம் சிறப்பு ஏற்பாடு செய்தார்.
நடிகர் சந்தானம் நடித்து தற்போது திரையில் வெளியாகி இருக்கும் படம் சபாபதி. இந்த திரைப்படத்தை தனது கல்லூரி நண்பர்கள் கண்டு களிப்பதற்காக மீனாம்பாக்கத்தில் உள்ள திரையரங்கை ஏற்பாடு செய்துள்ளார். அதில் கல்லூரி நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினர் என 150க்கும் மேற்பட்டோர் இலவசமாக திரைபடத்தை கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து நடிகர் சந்தானத்தின் நண்பர்கள் கூறும்போது, இன்று திரையுலகில் மிகப்பெரிய நடிகராக சநதானம் வளர்ந்திருந்தாலும், கல்லூரி கால நண்பர்களாகிய தங்களை என்றும் மறந்தில்லை. நடிகர் சந்தானம் நடித்த ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும், தங்களை இதுபோன்று குடும்பத்தினருடன் சென்று படம் பார்க்க ஏற்பாடு செய்வார். அதேபோல் எங்களது குடும்பத்தில் நடக்கின்ற விஷேசங்களில் தவராமல் அவர் கலந்துகொள்ளார். வரமுடியாத பட்சத்தில் அவரின் பங்களிப்பாவது இடம் பெறும் என நெகிழ்ச்சியுன் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.