ரூ. 6000 முதலீடு லாபமோ ஒரு லட்சம் ரூபாய்- இது தான் கஞ்சா பிசினஸ்

ரூ. 6000 முதலீடு செய்து ஒரு லட்சம் ரூபாய் லாபம் பார்த்த கஞ்சா வியாபாரிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-27 09:00 GMT

கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் போலீஸ் பாகாப்பில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம் சிவானந்த தெருவில் ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தாம்பரம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படியில் போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 20 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அங்கிருந்த இருவரையும் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள்  வண்டலூரை சேர்ந்த விக்னேஷ்(29), தாம்பரத்தை சேர்ந்த வினோத்(24), என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வந்து இவர்கள் ஒரு கிலோ கஞ்சாவை 6000 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், அதனை சிறு, சிறு பொட்டலங்களாக போட்டு 500 ரூபாய் என ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்று வந்ததும் தெரியவந்தது. இவர்கள் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

Tags:    

Similar News