பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை; தாயையும் தாக்கிவிட்டு தப்பிய கும்பல்
மடிப்பாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டிப்படுகொலை செய்துவிட்டு கும்பல் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கொலை செய்யப்பட்ட பாண்டுரங்கன்.
சென்னை மடிப்பாக்ம் அருகே மூவரசம்பேட்டையை சோ்ந்தவா் பாண்டுரங்கன்(29). இவா் பிரபல கஞ்சா வியாபாரி. இவா் மீது பல்லாவரம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, அடிதடி சண்டை வழக்குகள் உள்ளன. எனவே இவா் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளாா்.
இதற்கிடையே சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்து வீட்டில் இருந்து வந்தாா். ராமச்சந்திரன் பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு சம்பந்தமாக ஆலந்தூா் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு இன்று பகல் 12.30 மணிக்கு வீடு திரும்பினாா்.
இந்நிலையில் இன்று பகல் ஒரு மணியளவில் 5 போ் கொண்ட கும்பல் இவருடைய வீட்டிற்குள் புகுந்து, ராமச்சந்திரனை சரமாரியாக கத்தி, அரிவாளால் வீட்டிற்குள்ளேயே ஓடஓட விரட்டி வெட்டினா். மகன் ராமச்சந்திரனை காப்பாற்ற முயன்ற தாய் சுந்தரியையும் அரிவாளால் கைகளில் வெட்டினா். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பியோடியது.
கையில் வெட்டுக்காயத்துடன் வெளியே வந்த சுந்தரி கூச்சலிட்டாா். உடனே அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனா். மடிப்பாக்கம் போலீசாா் விரைந்து வந்து பாா்த்தபோது, ராமச்சந்திரன் வீட்டிற்குள்ளேயே உயிரிழந்து கிடந்தாா்.
உடனே போலீசாா் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அதோடு காயமடைந்த சுந்தரியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இந்த கொலைக்கு காரணம்,ஏற்கனவே ராமச்சந்திரன் செய்த கொலைக்கு பழிவாங்க நடந்த கொலையாக இருக்கலாம். இல்லையேல் ரவுடி கோஷ்டிகளிடையே ஏற்பட்டுள்ள மோதலில் நடந்த கொலையா? என்று போலீசாா் விசாரணை நடத்துகின்றனா்.