தாம்பரத்தில் பெட்ரோல், டீசல் விலையர்வை கண்டித்து சாலை மறியல்
தாம்பரத்தில் பெட்ரோல், டீசல் விலையர்வை கண்டித்து கால் டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து ஓட்டுநர்கள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ரெயில் நிலையம் அருகே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு. மற்றும் உரிமைக்குரல் ஒட்டுநர் தொழிற்சங்கம் ஆகியவை சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென வேளச்சேரி செல்லும் சாலையில் ஓட்டுனர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கத்தின் பொதுசெயலாளர்கள் ஹாகீர் உசேன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 நிமிடம் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய அரசு உடனடியாக வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.