ராஜ்பவன் மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
கிண்டி ராஜ்பவனில் உள்ள மின் ஊழியா் ஒருவர் 33 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்கொண்டதால் பரபரப்பு.;
மின்கோபுரத்தில் ஏறி துாக்கிட்டவரை மீட்கும் போலீசார்.
செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கம் அருகே உள்ளகரத்தில் வசித்தவா் கோதண்டராமன்(46). இவா், சென்னை கிண்டியில் ராஜ்பவனில் உள்ள மின்வாரியத்தில் மஸ்தூா் என்ற பெயரில் உதவியாளராக பணியாற்றினாா். இன்று கடைக்கு சென்று வருவதாக வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றாா்.
அவா், நங்கநல்லூா் இந்து காலனியில் 100 அடி சாலையில் 33 அடி உயரத்தில் உள்ள உயா் மின்அழுத்த கோபுரம் அருகே சைக்கிளை நிறுத்தினாா். அவசரமாக அந்த மின்கோபுரத்தில் சுமாா் 30 அடி உயரம் ஏறினாா். அங்கு இருந்த கம்பியில் கயிறுகட்டி தூக்கு மாட்டி தொங்கினாா்.
இந்த சம்பவத்தை பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனா். உடனடியாக பழவந்தாங்கல் போலீசாா் விரைந்து வந்தனா். மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்இணைப்பை துண்டித்துவிட்டு, மின்கோபுரத்தில் ஏறி, கயிற்றை அறுத்து கீழே இறக்கினா்.
பின்னர், அருகே உள்ள தனியாா் மருத்துவனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவருடைய உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பழவந்தாங்கல் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.