தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்தில் பாமக வேட்புமனு தாக்கல்

தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

Update: 2022-01-30 03:15 GMT

தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் கவிதா வெங்கடேசன் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டல அலுவலகத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் கவிதா வெங்கடேசன் 18 வது வட்டத்திற்காக போட்டியிட வேண்டி தேர்தல் அதிகாரி மெர்சிலின் லதா அவர்களிடம் மனு தாக்கல் செய்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியினர் அனைவரும் கவிதா வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

முன்னதாக பம்மல் மண்டல அலுவலகத்தை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர் மட்டுமே அனுமதிக்கபடுவர் என்றும் பத்திரிக்கையாளர்கள், ஊடகதுறையினர் யாருக்கும் அனுமதி கிடையாது என கூறினார். ஆணையாளர் இவ்வாறு கூறியது பத்திரிக்கையாளர்களுக்கு அதிருப்தியையும், வேட்பு மனு தாக்கல் செய்ய உடன் வருபவர்களையும் வருத்தமடைய செய்தது.

வேட்மனு தாக்கலின் போது மாவட்ட செயலாளர் ஜே.எம்.சேகர், முன்னாள் மாநில துணைச் செயலாளர் இரா.வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் பூக்கடை முனுசாமி உட்பட பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News