பல்லாவரம்: ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

பல்லாவரத்தில் ஆல் அவுட் குடித்து 3 வயது குழந்தை உயிரிழந்தது.;

Update: 2021-10-11 09:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த பம்மல், பாத்திமா நகர், வெள்ளச்சாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இவரது 3 வயது குழந்தை கிஷோர் நேற்றிரவு வீட்டில் ஆல் அவுட் கொசு மருத்தை தவறுதலாக குடித்து விட்டது.

இதனை கண்ட பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறுவுறுத்தினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை கிஷோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டது.

சமபவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தை ஆல் அவுட் குடித்து இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம், பெற்றோர் தனியார் கிளினிக் மருத்துவர் சுபாஷ் மீது புகார். இவர் வேறு ஒரு மருத்துவரின் பதிவு எண்ணை வைத்து மருத்துவர் தொழில் செய்து வருவதாக புகார். புகாரின் அடிப்படையில் போலீசார் மருத்துவர் சுபாஷை தேடி வருகின்றனர். தற்போது அவர் நடத்தி வரும் சாய் கிளினிக் பூட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News