ஒமிக்ரான் எதிரொலி: தாம்பரத்தில் மீண்டும் கிருமி நாசினி தெளிப்பு
ஒமிக்கரான் எதிரொலியாக, தாம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.;
தமிழகத்தில் ஒமிக்கரான் தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தற்போது ஒமிக்காரன் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பரம் ஆனந்தபுரம் நண்பர்கள் குழு சார்பில் வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனந்தபுரம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் தாம்பரம் முழுவதும் வாகனத்தில், வீதி வீதியாக சென்று கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கி வருகின்றனர்.