பெரும்பாக்கத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் வழங்கல்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் போர்வைகள் உட்பட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் தமிழ்நாடு தொழில் பயிற்சி இயக்குனர் வீரராகவ ராவ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ், இணை மேலாண்மை இயக்குனர் சிவா கிருஷ்ணமூர்த்தி, சென்னை பெருமாநகராட்சி தெற்கு துணை ஆணையர் சிம்ரன்ஜித், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்